| கண்ணுறக்கம் | போச்சுதடி | கள்ளியே | – உன்னைக் |
| காணத்தினம் | துடிக்கிறேனே | துள்ளியே! | |
| காத்திருக்கச் | சொன்னாயே | கன்னியே | – நீஏன் |
| கண்டுகொள்ள | வில்லையடி | என்னையே! | |
| ஆத்தங்கரை | தோப்பினிலே | கிள்ளையே | – உன்னை |
| அணைத்திடவே | ஏங்குறேனே | முல்லையே! | |
| பார்த்தவிழி | பூத்ததடி | வள்ளியே | – என்னைப் |
| பார்த்தமலர் | சிரிக்குதடி | எள்ளியே! | |
| ஜோடிப்புறா | கிளைதனிலே | கொஞ்சுது | – மான்கள் |
| சேர்ந்திணைந்து | புறாயினத்தை | மிஞ்சுது! | |
| நாடிமலர் | தேடிவண்டு | உண்ணுது | – உன்னை |
| நான்நினைத்தேன் | மனதென்னவோ | பண்ணுது | |
| காமனுக்கும் | எனக்குமில்லை | வம்பு | – ஏனோ |
| கனைதொடுத்து | வீசுறானே | அம்பு! | |
| மாமனென்மேல் | உனக்கிலையோ | அன்பு | – தனியே |
| வாடுகிறேன்; | நீதருவாய் | தெம்பு! | |
| குயிலும்தன் | துணையெண்ணிப் | பாடும் | – அந்தக் |
| குரல்கேட்டுப் | பெண்குயிலும் | நாடும்! | |
| மயில்கடை | மேகத்திற் | காடும் | – எனது |
| மனமோநீ | வரும்பாதை | தேடும்! | |
| பிடிவாதம் | விட்டுவா | இங்கே | - உன்னைப் |
| பார்க்காமல் | வாழ்வதுநான் | எங்கே! | |
| வடிவழகே | தேடுகிறேன் | எங்கும் | – நீயும் |
| வந்தால்தான் | என்னுயிரும் | தங்கும் |
கள் குடிக்க வா
| வண்ணமலர் | பூத்திருக்கு | வண்டுவந்து | காத்திருக்கு | |
| என்னவளே | தேனெடுத்து | இன்பம்தரவா | -கண்ணே | |
| கன்னமுத | வாயிதழில் | கள்குடிக்கவா! | ||
| நேத்துஎன்னைப் | பார்த்துவிட்டு | நிற்காமே | போனியேடி | |
| காத்துநிற்க | விடுவதுதான் | காதலொக்குமா | -கண்ணே | |
| காரணத்தைக் | கூறடியோ | கண்ணுப்பக்கமா! | ||
| அன்னத்திடம் | சொன்னதென்ன | ஆருக்குநீ | தூதுவிட்டே | |
| என்னக்கிட்ட | வரவில்லையே | என்னகதையோ | -கண்ணே | |
| ஏக்கம் | என்னைத்தாக்குதடி | வண்ணக்கிளியே! | ||
| ஏபுள்ளே | தூக்குனேனே | இளவட்டக் | கல்லுரெண்டு | |
| காளையை | அடக்குனேனே | காணவில்லையா | – உன்னைக் | |
| கட்டிக்கொள்ள | என்னசெய்ய | கூறடிபெண்ணே! | ||
| கம்புச்சண்டை | கத்திச்சண்டை | குத்துச்சண்டை | மல்லுக்கட்டு | |
| சேவச்சண்டை | கடாச்சண்டை | ஜெயிக்கட்டுமா | – இல்லை | |
| ஆடுபுலி | வேடமிட்டு | ஆடட்டுமா! | ||
| வானவில்லைக் | கயிறாக்கி | சந்திரனை | சூரியனை | |
| நட்சத்திரக் | கூட்டத்தைக் | கட்டிவரவா | -இல்லை | |
| வானுலகக் | காமதேனைக் | கூட்டிவரவா ! | ||
| தேன்எடுத்துத் | தேன்தரவா | தேவையென்ன | கூறடியோ | |
| காமனுக்கு | ரதிபோல | வந்துசேரடி | – இந்த | |
| மாமனின்னும் | எத்தனைநாள் | காத்திருப்பேன்டி ! |
இன்பசுகப் பெட்டகமே
| கட்டிதந்த | கனுக்கரும்பே! | கயல்துள்ளும் | மைவிழியே! |
| கொட்டிவைத்த | முத்தழகே! | குலமகளே! | கனிமொழியே! |
| எட்டியிருந் | தென்மனதில் | இனிக்கின்ற | நல்லமுதே! |
| அட்டியில்லை | காந்தமென | சுற்றிடுவா | சீரழகே! |
| வான்நிலவு | உன்அக்காள்! | வண்மையில் | உன்தங்கை! |
| தேனுனக்குத் | தோழியடி! | தென்றலுனக் | கப்படித்தான்! |
| பூக்கூட்டம் | விண்மீன்உன் | பணிப்பெண்க | ளாகுமடி! |
| பேரழகே | இன்பசுகப் | பெட்டகமே | வாராயோ! |
| வெண்பாவின் | நடைதுள்ள | என்பாவாய் | நீ |
| பெண்பாவாய் | என்னுளத்தைப் | பெரும்பாலை | யாக்கிடாதே! |
| கண்பார்ப்பாய் | கண்மணியே! | களிசேர்ப்பாய் | என்வாழ்வில் |
| உன்பார்வை | என்பார்வை | ஒன்றாக்கு | மான்மகளே! |
| கோடியொரு | பூமலரும் | கோகிலக்கண் | நீதிறந்தால்! |
| ஆடிவரும் | அன்னம்தேர் | அசைபோடும் | உன்நடையில்! |
| பாடிவரும் | பூங்குயிலும் | பனிக்குளிரும் | உன்மொழியில்! |
| கூடிவர | வாழ்வுதரக் | கோதையேநீ | வந்துவிடு! |
| பூதளத்துப் | பொன்தனமே! | பூத்திருக்கும் | தாமரையே! |
| மாதரசி | மாணிக்க | மணிக்குலத்து | வாழ்வரசி! |
| தீதறியாத் | தென்தமிழே! | திராவிடத்துப் | பெரும்புகழே! |
| ஏதுமறி | யாயென்னை | ஏங்கவிடா | தேதேவி |
| முக்கனியின் | சாற்றைப்போல் | முத்தமிழின் | ஊற்றைப்போல் |
| எக்காலும் | வாழ்ந்திருப்போம் | ஏந்திழையே | வந்துவிடு |
| திக்கெல்லாம் | ஒளிகூட்டும் | தினகரனைச் | சாட்சிவைப்போம் |
| தக்கவைப்பாய் | என்னுயிரை | தந்துவிடு! | வந்துவிடு! |
கிணற்று நீருநான் உனக்கு
| ஆண்:- | அத்தை | மகளே! | சித்திரப் | பெண்ணே! |
| அழகே! | மயிலே! | வாவா! | ||
| அக்கம் | வரவா! | முத்தம் | தரவா! | |
| வெக்கம் | ஏனடி | மானே! | ||
| பெண்:- | மொட்டு | மல்லிகை | மணக்கும் | – உந்தன் |
| மோகமென் | மனதைத் | தகர்க்கும்! | ||
| கட்டுக் | குலையா | மேனி | இருக்கு | |
| கட்டி | அணைத்திட | வாவா! | ||
| ஆண்:- | அணைப்பிலே | சுகத்தைத் | தரவா | – உன்னை |
| அமுதக் | கடலிலே | விடவா! | ||
| உனக்கும் | எனக்கும் | உறவு | – தருமே | |
| ஒவ்வொரு | நாள்வரும் | இரவும் | ||
| பெண்:- | கிணற்று | நீருநான் | உனக்கு | – இதில் |
| கேட்கத் | தோனுமோ | கணக்கு | ||
| திகட்டும் | வரைக்கும் | இன்பம் | – அதையே | |
| எடுத்திடு | கொடுத்திடு | வாவா! | ||
| ஆண்:- | தங்கத் | தாலியுடன் | வரவா | – என்னைத் |
| தாரை | வார்த்துத் | தரவா! | ||
| கோவைக் | கனியே! | குங்குமச் | சிமிழே! | |
| பாவை | விளக்கே! | வாவா! | ||
| இருவரும்:- | ஒன்று | சேருவோம் | தோதா | – இதை |
| உலகம் | வெறுக்குமோ | தீதா! | ||
| வாழ்ந்து | காட்டுவோம் | வாவா! | -வாழ்வில் | |
| வெற்றி | நாட்டுவோம் | வாவா! |
இருவரும்:- ஒன்று சேருவோம் தோதா – இதை – உலகம் வெறுக்குமோ தீதா! வாழ்ந்து காட்டுவோம் வாவா! வாழ்வில் – வெற்றி நாட்டுவோம் வாவா
உலகம் தெரியலே
| என்னத்தைநான் சொல்லப்போறேன் அத்தானே – மனசு எதைநெனச்சோ குழம்பிப்போயி பித்தானேன். | |||
| கண்ணு | திறந்து | பார்த்து | இருக்குது |
| ஒன்னும் | தெரியலே – | இரண்டு | |
| காது | கூட | நல்லா | இருக்கு |
| ஒன்னும் | கேக்கலே! | ||
| உடலு | மட்டு | இங்கே | இருக்கு |
| உணர்வு | தெரியலே – | எந்த | |
| உறவும் | துறவும் | புரிய | வில்லை |
| ஒன்னும் | சரியில்லை! | ||
| பூவை | எடுத்து | முகர்ந்து | பார்த்தேன் |
| மணக்கவே | இல்லை – | வீட்டுப் | |
| பூஜை | அறையில் | வணங்கிப் | பார்த்தேன் |
| மனசு | தெளியலே! | ||
| சேலை | இடுப்பில் | சுற்றிப் | பார்த்தேன் |
| சொருக | முடியலே – | இங்கே | |
| சொந்தம் | பந்தம் | இருக்கு | றாங்க |
| நினைப்பிலே | இல்லே! | ||
| வயலில் | நெல்லு | விளைஞ்சு | கிடக்கு |
| அறுக்க | முடியலே – | அதைக் | |
| கட்டுக் | கட்டி | களத்து | மேட்டுலே |
| சேர்க்க | முடியலே | ||
| கதிரை | அடிச்சு | நெல்லு | மூட்டை |
| கட்ட | முடியலே – | அதைக் | |
| கவனத் | தோடு | வீடு | கொண்டு |
| சேர்க்க | முடியலே | ||
| மயக்க | முன்னு | சொல்லு | வாங்க |
| அதுவா | இருக்குமா – | இல்லை | |
| மாய | வேலை | சித்து | வேலை |
| இதுவா | இருக்குமா! | ||
| காத | லுன்னு | சொல்லு | வாங்க |
| அதுவா | இருக்குமா – | இந்தக் | |
| கதை | எனக்குப் | புரிய | லையே |
| சொல்லு | அத்தானே! | ||
| உன்னை | நினைச்சேன் | உன்னை | நினைச்சேன் |
| உறக்கமே | இல்லை – | உங்க | |
| ஒருத்த | ரையே | நினைச்ச | தாலே |
| உலகம் | தெரியலே! | ||
| கண்ணை | மூடி | இருந்தா | லுங்கள் |
| உருவம் | தெரியுதே – | தென்றல் | |
| காற்றைத் | தூது | அனுப்பு | றேன்நான் |
| வாங்க | அத்தானே! | ||
| தைய | லென்னைத் | தேடி | வாங்க |
| தைபொ | றக்குது – | எனக்கு | |
| தாலி | கட்டி | மாலை | சூட்டி |
| மனசைத் | தேத்துங்க. | ||
கண்டதும் காதல்
| பூவாடை | எனைமயக்கத் | திரும்பிப் | பார்த்தேன் | |
| பொன்னோடை | எழில்மேனி | பொலிவு | கூட்டும் | |
| பாவடை | தாவணியின் | பருவ | மங்கை | |
| பார்வையிலே | சுருக்கிட்டு | எனையி | ழுத்தாள்! | |
| மாவாட்டும் | கற்குழவி | யாகி | எந்தன் | |
| மனஞ்சுழல | உணர்வுந்த | ஆர்வத் | தாலே | |
| நாவாட | நான்துணிந்தேன்; | அவளோ | மெல்ல | |
| நடைபெயர்ந்தாள்; | நான்தொடர்ந்தேன்; | கடலோ | பக்கம் | |
| பார்வையிலே | எனையிழந்தேன்; | கன்ன | லாளின் | |
| பசப்பினிலே | நினைவிழந்தேன்; | கொவ்வைச் | செந்தேன் | |
| கோர்வையிதழ்ச் | சிவப்பினிலே | செயலி | ழந்தேன் | |
| குலைக்கனியாம் | கன்னத்தை | மார்பைக் | கண்டு | |
| ஊர்வெளியைச் | சூழ்நிலையை | மறந்தே | போனேன்! | |
| உளறுமொழி | கிறுக்கனைப்போல் | புலம்ப | லானேன்! | |
| கூர்விழியாள் | கடற்கரையை | அடைந்த | போது | |
| குமுறுமுணர் | வோடங்கு | நானும் | சேர்ந்தேன்! | |
| நான்பார்த்தேன்; | மான்பார்த்துத் | திரும்பிக் | கொண்டாள்! | |
| நான்பார்க்காப் | பாவனையில் | திரும்பும் | போது | |
| மான்பார்த்தாள்; | நேர்க்கோட்டில் | விழிகள் | சேர | |
| மணிபார்த்தேன் | இரவெட்டு; | நிலவோ | நல்ல | |
| தேன்வார்த்து | ஒளிகொட்டும்; | அலைகள் | தாவும் | |
| திசைஎங்கும் | இன்பமோ | இன்பம் | என்றே | |
| தானார்த்துக் | காதலர்கள் | இளமை | வேகம் | |
| தணித்திருந்தார்; | நாங்களங்கே | தனித்தி | ருந்தோம் |
பெண் விழிப்பு
| பெண்ணுக்கும் | ஆணுக்கும் | சமத்து | வந்தான் | |
| பேசுகிறோம் | இந்நாளில்; | ஆனால், | அந்நாள் | |
| பெண்ணிழிவு | பேசியுமே | அடிமை | யாக்கி | |
| பிழைகூறி | வழிமாறி | பழிகள் | தூற்றி | |
| பெண்ணைப்போய் | பேயென்றும் | மாயம் | செய்யும் | |
| பிசாசென்றும் | காட்டேரி | கூனி | என்றும் | |
| கண்ணெதிரே | வருகின்ற | உரிமை | போக்கி | |
| கடைக்கோடி | அடுப்படியில் | ஒதுக்கி | வைத்தார்! | |
| பெண்ணுக்கு | வீட்டிலேயும் | வெளியி | லேயும் | |
| பேசுவதற்கு | உரிமையிலை; | நாணம் | அச்சம் | |
| பெண்ணிற்கு | மட்டுமென | கதவுப் | பக்கம் | |
| போயொதுங்க; | உணர்வொடுங்க; | அடிமை | செய்தார் | |
| வண்ணமலர் | வான்நிலவு | உயிரோ | வியம் | |
| வடிவழகு | என்றேட்டில் | எழுதி | வைப்பார்! | |
| பெண்ணடக்கி | ஆண்டிடுவார்; | ஆண்மை | என்பார்! | |
| பேதமையால் | அழித்திட்டார்; | மடமை | காத்தார்! | |
| பெண்ணின்றி | ஆணுக்கு | இன்பம் | ஏது | |
| பிரசுகங்கள், | பிரசவங்கள் | எவரால் | கிட்டும் | |
| பெண்ணின்றி | ஆண்வர்க்கம் | தோன்றப் | போமோ | |
| பிள்ளைவளர்க் | கின்றபாசம் | யாரின் | பாசம்; | |
| பெண்வெறுக்கும் | ஜடாமுடிசேர் | முனிவர் | கூட | |
| பெண்துறவி | சீடர்துணை | கொண்ட | துண்டு | |
| கண்ணிரண்டு | ஆடவர்க்கு | உண்டு | என்றால் | |
| கண்ஒன்று | பெண்ணென்று | கண்டார் | இன்று | |
| வாளேந்தி | பரியேறி | போர்வென் | றாண்ட! | |
| வரலாறு | பெண்ணுக்கும் | உண்டு; | நல்ல | |
| கோலேந்தும் | வீரமங்கை | வேலு | நாச்சி | |
| குன்றிலுயர் | மங்கம்மா | ஜான்ஸி | உண்டு | |
| வேலேந்தி | ஆண்வர்க்கம் | அடிமை | கொண்ட | |
| ஆரவல்லி | சூரவல்லி | அமுத | வல்லி | |
| சூளேந்தி | ஆண்டதுவும் | உண்டு; | அந்த | |
| துடிப்புத்தான் | பெண்ணுரிமை | விடிவின் | உச்சம்! | |
| அடிமைப்பெண் | ணைச்சந்தைப் | பொருளாய் | விற்றார் | |
| ஆடுமா | டொப்ப | இழிநிலையில் | வைத்தார் | |
| கொடுமையிது | கொடுமையென | அண்ணல் | நபிதான் | |
| கொடுஞ்செயலின் | வேரறுத்தார் | வெற்றி | கண்டார் | |
| மிடிமையொடு | மடமையற | பெரியார் | காந்தி | |
| பாரதிபா | ரதிதாசன் | கலைஞர் | அண்ணா | |
| படித்தபகுத் | தறிவாளர் | திரண்டு | வெற்றிப் | |
| படிமுகத்தில் | பெண்ணுயர்த்தி | வைத்தார்; | வென்றார்! | |
| படிப்பதிலும் | நடிப்பதிலும் | விண்ணா | ராய்ந்து | |
| பறப்பதிலும் | பட்டங்கள் | சட்டம் | ஆளத் | |
| துடிப்பதிலும் | கல்விகேள்வி | வேலை | வாய்ப்பில் | |
| தொய்வின்றி | விழிப்போடு | விளையாட் | டினிலும் | |
| பிடிப்போடு | சமமாக | உயர்ந்தார் | பெண்கள், | |
| புதுப்புரட்சி | செய்கின்ற | காலம் | கண்டோம்! | |
| அடிப்படையில் | ஆண்பெண்கள் | சமமென் | றாச்சு! | |
| ஆர்ப்பரித்து | எழுந்ததுகாண்; | பெண்வி | ழிப்பு! |
வண்ணக்கிளியே!
| மூழ்கிமூழ்கி | முத்தெடுத்து |
| முதிர்ந்தமுத்தைத் | தேர்ந்தெடுத்து |
| முத்துப்பல்லுக் | காரி உனக்கு |
| அள்ளித்தருவேன் – | உன்னை |
| முத்துப்பல்லாக் | கேற்றிவைத்துச் |
| சுற்றி | வருவேன்! |
| கட்டுக்கட்டா | கரும்பெடுத்து |
| கணுக்கணுவா | வெட்டியதில் |
| நடுக்கரும்பை | நானெடுத்து |
| உனக்குத் | தருவேன் – என் |
| நாடிநரம்பில் | நீமட்டும்தான் |
| நல்லாப் | பாரடி! |
| மொட்டுமொட்டா | அரும்பெடுத்து |
| முல்லைமலர் | சரந்தொடுத்து |
| கட்டுக்குழல் | சூட்டுவேன்நான் |
| கண்ணே | கற்கண்டே– உன் |
| கழுத்தில்தாலி | கட்டுவேன்நான் |
| பெண்ணே | பூச்செண்டே! |
| மாடுமனை | தோட்டமிருக்கு |
| மஞ்சள்கடலை | கரும்புக்காட்டில் |
| பஞ்சடியைப் | பதிக்கவாடி |
| பச்சைக்கிளியே – | எனக்குப் |
| பாலும்தேனும் | அழுதும்தாடி |
| இச்சைக் | கிளியே! |
| தட்டித்தட்டி | தங்கத்திலே |
| தட்டுப்பாடு | இல்லாமலே |
| தட்டான்தந்தான் | நகைவகைகள் |
| தங்கரெத்தினமே – | உனக்கு |
| தாலிகூட | செய்துவிட்டேன் |
| பொண்ணு | ரெத்தினமே |
| பட்டுப்பட்டா | காஞ்சிப்பட்டு |
| பலகடையிலே | தேடிஉனக்குக் |
| கட்டுக்கட்டா | சேலைவாங்கிக் |
| காத்திருக்கேன்டீ – | என்னை |
| காக்கவைக்க | லாகுமோஎதிர் |
| பார்த்திருக் | கேன்டீ! |
| சுத்திச்சுத்தி | திலோத்தமைகள் |
| ஊர்வசிகள் | மேனகைகள் |
| மோகினிகள் | மயக்குறாங்க |
| அன்னக் | கிளியே – என்னை |
| அடைந்துசுகம் | தந்திடடீ |
| வண்ணக் | கிளியே! |
| தைதையின்னு | தைவருது |
| தாளமேளம் | நாதஸ்வரம் |
| வைத்துனக்கு | மாலையிடுவேன் |
| வண்ணவண்ணமா – | ஊரார் |
| வாழ்த்துவார்கள் | நீயும்நானும் |
| வாழ்வோம் | திண்ணமா! |
மேகமே தூது போ
| மேகமே | “வா” என் |
| வேதனை | கேளு! |
| மோகமோ | “தீ” ப்போல் |
| மூள்வதைப் | பாரு! |
| தாகமோ | மீறுது! |
| தனிமை | தகிக்கிது! |
| சோகமே | சூழுது! |
| சொல்அவ | ரிடத்தில்! |
| பொங்குது | ஆசை! |
| புழுங்குது | உள்ளம்! |
| திங்குது | வேட்கை! |
| திகைக்குது | மனது! |
| எங்கிருப் | பாரோ |
| என்னுயிர் | அவரிடம்! |
| தங்கிடத் | தாங்கிடத் |
| தயக்கமேன் | வரச்சொல்! |
| பறந்து | திரிகிறாய்! |
| பலஊர் | அலைகிறாய்! |
| மறந்தி | டாதே |
| மதிதவழ் | முகிலே! |
| பிறந்தேன் | அவர்க்கென |
| பிரிய | முடியுமோ! |
| இறந்து | படுமுன் |
| என்னிடம் | வரச்சொல்! |
| தாகமோ | விரகமோ! |
| தாக்கிடும் | புயலோ! |
| வேகமோ | நாகமோ! |
| வில்விடு | வினையோ! |
| தேகமும் | எரியுது! |
| ஏகமும் | எரியுது! |
| நோகவோ | சாகவோ! |
| நிம்மதி | தரச்சொல்! |
| கண்டேன் | அவரை! |
| உண்டேன் | அழகை! |
| கொண்டேன் | மையல்! |
| குலநலன் | இழந்தேன்! |
| பண்டுநாள்; | சிறுமிநான் |
| பழகிய | பாங்கினை |
| எண்ணிப் | பார்த்து |
| என்னிடம் | வரச்சொல்! |
| காவியம் | படைத்திட |
| களிநடம் | பூத்திட |
| மேவிய | உணர்வால் |
| மெலிந்தேன் | உடலும்! |
| ஓவிய | மாயென் |
| உளம் | ஒளிர்பவரை! |
| ஆவிபோய் | சாகுமுன் |
| மேகமே | வரச்சொல்! |
| தூவிய | மலர்விரி |
| துயில்கொளு | மஞ்சம் |
| தேவியென் | உடல்பட |
| சேர்வது | எந்நாள்? |
| நாவினில் | இன்சொல் |
| நவிலு | மேகமே! |
| பூவினில் | தேன்பெற |
| புசித்திட | வரச்சொல்! |
| கண்” அவர் | எனக்கவர்! |
| காத்திட | வரச்சொல்! |
| பெண்” உயிர் | அவரிடம் |
| பேணிட | வரச்சொல் |
| மென்மை | மேனியை |
| மேவிட | வரச்சொல்! |
| தண்” குளிர் | மேகமே |
| தாங்கேன் | தூதுபோ! |
பாதை மாறிடு கண்ணே
| இயம் பெண்ணுக்கும் வயோதிகனுக்கு நடந்த திருமணத்திற்குப் பின். முதலிரவில் | ||||
| அவன்: | பாதை | மாறிடு | கண்ணே | - வாழ்க்கைப் |
| பயணம் | தொடங்கும் | முன்னே! | ||
| மாதுனை | தொடுவதும் | இல்லை | - எந்தன் | |
| மனதிலும் | ஆசைகள் | இல்லை! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவள்: | இளமை | இருப்பது | குறையோ | - நான் |
| ஏங்கித் | தவிப்பதும் | முறையோ! | ||
| அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
| ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
| அவன்: | இன்பம் | தருமே | இளமை | - அதை |
| ஏங்கித் | தவிக்குதே | முதுமை! | ||
| துன்பம் | வேண்டாம் | கண்ணே | - மாறிட | |
| துணிந்திடு | கைபடும் | முன்னே! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவள்: | பாதை | மாறுமோ | உள்ளம் | - பெண்ணின் |
| பரம்பரைக் | கேயது | கள்ளம்! | ||
| அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
| ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
| கொதிக்குது | மீறுது | ஆசையே | - நான் | |
| கோடு | தாண்டினால் | வேசையே! | ||
| மிதிக்குதே | கடமை | கண்ணியம் | - இதை | |
| மீறுமோ | எனது | பெண்ணியம்! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவன்: | இறைவன் | கொடுத்தான் | இளமை | - இதில் |
| இன்பம் | ஒன்றுதான் | தலைமை! | ||
| பழியென | நினைத்தால் | மடமை | - இதில் | |
| பாவம் | இல்லையிது | கடமை | ||
| ஓடிடும் | மானையும் | பிடித்தேன் | - அதை | |
| உற்றவ | ரிடம் | ஒப் | படைத்தேன்! | |
| நாடிய | செய்தேன் | அன்று | - எனக்கு | |
| நாடியும் | தளர்ந்தே | இன்று! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவள்: | பாதை | மாறுமோ | உள்ளம் | - பெண்ணின் |
| பரம்பரைக் | கேயது | கள்ளம் | ||
| அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
| ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
